கோலிவுட் கிசுகிசு: நம்பர் ஒன் இடத்தை பிடிக்க பேராசைப்படும் வாரிசு நடிகை!

கோலிவுட் கிசுகிசு: நம்பர் ஒன் இடத்தை பிடிக்க பேராசைப்படும் வாரிசு நடிகை!

கோலிவுட்டின் நம்பர் ஒன் இடத்தை பிடித்தே தீர வேண்டும் என்ற ஆசையில் பிரபல வாரிசு நடிகை முடிவெடுத்துள்ளாராம்.

சென்னை: கோலிவுட்டின் நம்பர் ஒன் இடத்தை பிடித்தே தீர வேண்டும் என்ற ஆசையில் பிரபல வாரிசு நடிகை முடிவெடுத்துள்ளாராம்.

கோலிவுட்டின் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்ட வாரிசு நடிகை நம்பர் நடிகையை போல் நம்பர் ஒன் இடத்திலும், அதிக சம்பளமும் வாங்க ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. அறிமுகமான படத்தில் இருந்தே முக பாவனையும், சிரிப்பையும் காட்டி ரசிகர்களை கவர்ந்து வந்த இவர், சமீபத்தில் நடித்த ஒரு படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தன் மீதான பிம்பத்தை மாற்றினார்.

அதைத் தொடர்ந்து வலுவான ரோல்களில் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்தால் மீண்டும் சிரித்து சிரித்து மலுப்பி வருகிறார். தனக்கும் நம்பர் நடிகையை பார்த்து பொறாமைப்படுவதாகவும், கோலிவுட்டில் முதலிடம் பிடிக்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதன் முதல் படியாக பெரிய நடிகர் படத்தில் நடித்துள்ள வாரிசு நடிகைக்கு பெரிதாக ரோல் இல்லை என்றாலும், கூடுதல் சம்பளம் கொடுங்கள் என கராராக சொல்லிவிட்டாராம். நம்பர் நடிகை நடிப்பால் ரசிகர்களை வென்று, தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். ஆனால், வாரிசு நடிகையோ நடிப்பை விட்டு சம்பளத்தில் குறியாக இருப்பதாக கூறப்படுகிறது.

வயது வித்தியாசம் பார்க்காமல் பெரிய நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வரும் வாரிசு நடிகை, கோட் போட்ட நடிகருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று காத்திருக்கிறாராம்.

Share this story