சர்கார் வெற்றி விழா கொண்டாட்டம்: கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் வடிவங்கள்!

சர்கார் வெற்றி விழா கொண்டாட்டம்: கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் வடிவங்கள்!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்த நிலையில் இதன் வெற்றி விழாவானது கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில்  வெளியான சர்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்த நிலையில் இதன்  வெற்றி விழாவானது  கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கடும் சர்ச்சைகளைக் கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. சர்கார் படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையடுத்து தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மறு தணிக்கை செய்யப்பட்ட இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது.

இந்நிலையில் சர்கார் படத்தின் வெற்றிவிழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட சில பொருட்களின் வடிவங்கள் இடம்பெற்றிருந்தன.

சர்கார் வெற்றி விழா கொண்டாட்டம்: கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் வடிவங்கள்!

சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை தீயில் போட்டுக்  கொளுத்தும் காட்சி தடாலடியாக நீக்கப்பட்ட நிலையில், வெற்றிவிழா கேக்கில் இந்தப் பொருட்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story