சாரா அலி கான்,கங்கா ஆரத்தி வில்லங்கமாகிறது.

சாரா அலி கான்,கங்கா ஆரத்தி வில்லங்கமாகிறது.

பிரபல நடிகர் சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான் சமீபத்தில் காசி விசுவநாதர் ஆலயத்தில் நடை பெறும் கங்கா ஆர்த்தி என்கிற நிகழ்வில் கலந்துகொண்டு அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அது தீவிர இந்துத்வா ஆசாமிகளை டென்ஷனாக்கி இருக்கிறது. முக்கியமாக அவர் வழியில் இருந்த கடைகளை எல்லாம் காட்டி இருந்தது குறித்து காசி விகாஸ் சமிதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறது.

[video:https://www.instagram.com/p/B9wgYRmpPH7/?utm_source=ig_web_copy_link]

சாரா அலி இதை பார்த்து படமெடுத்து ஆர்வமாக வெளியிடுவது வேறு, அவருக்கு இது வேடிக்கை எங்களுக்கு இது வழிபாடு என்று உள்ளூர் பக்த்தர் ராகேஷ் மிஸ்ராவின் கருத்து. சாராவின் தந்தை இஸ்லாமியராக இருந்தாலும், அவரோடு வந்த அவருடைய தாய் அம்ரித்தா சிங் உண்மையான இந்துதானே என்கிறது இன்னொரு தரப்பு.லோக்கல் பண்டிட்களின் இந்த எதிர்ப்பை உள்ளூர் மக்களே சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.

[video:https://www.instagram.com/p/B9xOcUNpJUW/?utm_source=ig_web_copy_link]

கங்கா ஆர்த்தியைகான தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் வருகிறார்களே அவர்கள் எல்லாம் இந்துக்களா என்கிறார் ஒரு உள்ளூர் டாக்சி ஓட்டுனர்.எல்லா வற்றிலும் பிரிவினை வாத நோக்கோடு பார்க்கும் ஒரு மைனாரிட்டி கூட்டம் தலையெடுத்து இருப்பது நல்லதல்ல என்று இந்த அரசுக்கு யார் சொல்வது.

[video:https://www.instagram.com/p/B9xQmefpTFt/?utm_source=ig_web_copy_link]

 

Share this story