சித்தார்த் மாஸ் ஹீரோவாக அசத்தியுள்ள அருவம் பட டீசர் வெளியானது!

சித்தார்த் மாஸ் ஹீரோவாக அசத்தியுள்ள அருவம் பட டீசர் வெளியானது!

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள அருவம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் சித்தார்த் நடிப்பில்  உருவாகியுள்ள அருவம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

அரண்மனை 2, அவள் போன்ற போன்ற ஹாரர் திரில்லர்களில் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சித்தார்த் நடித்துள்ள ஹாரர் படம் அருவம். இயக்குநர் சாய் சேகர் இயக்கியுள்ள இப்படத்தில் கேத்ரின் தெரசா, காளி வெங்கட், கபீர் துகான் சிங், ஆடுகளம் நரேன், கருணாகரன், சத்யராஜ், இனிகோ பிரபாகரன், சதீஷ் என்று 
ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். சுமார் 45 நொடி கொண்ட இதில்  சித்தார்த் உணவு பாதுகாப்பு அதிகாரியாக வலம் வருவது போல் தெரிகிறது. 

ஹாரர் அம்சங்கள் சில இடங்களில் வெளிப்பட்டாலும் சித்தார்த் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.உணவு கலப்படப் பிரச்சினை கதையில் முக்கிய பங்குவகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Share this story