சிவகார்த்திகேயனின் SK15 படத்திற்கு தயாரான யுவன் சங்கர் ராஜா

சிவகார்த்திகேயனின் SK15 படத்திற்கு தயாரான யுவன் சங்கர் ராஜா

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் SK 15 படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் SK 15 படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தற்போது இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். 

அதைத்தொடர்ந்து ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பிஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் SK15 நடிக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில் இதில் கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் நாச்சியார் படத்தில் நடித்த இவானா நடிக்கவுள்ளனர். மேலும்  இதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில், SK15 படத்தின் பணிகள் துவங்கவுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்துக்கு பிறகு இணையும் சிவகார்த்திகேயன் – யுவன் கூட்டணி  ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this story