சூர்யா அரசியலுக்கு வந்தா எப்படி இருக்கும்? விறுவிறுவென என்.ஜி.கே டீஸர்!

சூர்யா அரசியலுக்கு வந்தா எப்படி இருக்கும்? விறுவிறுவென என்.ஜி.கே டீஸர்!

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது

சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா- செல்வராகவன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் NGK. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பக்க பட்ட நிலையில் இயக்குநர் செல்வராகவன் உடல் நிலை சரி இல்லாமல் படம் தள்ளி போனது. 

பின்பு இப்படத்தின் அப்டேட் விடுமாறு நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வெய்துவந்தனர். அதை ஏத்து படத்தின் டீஸர் வரும் காதலர் தின ஸ்பெஷலாக இன்று (பிப்.14) மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாகப் படக்குழு தெரிவித்திருந்தது.

மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீசாகும் கார்த்தியின் ‘தேவ்’ திரைப்படத்துடன் என்.ஜி.கே டீசர் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே ‘என்.ஜி.கே’ டீசர் லீக்கானதால், பைரசியை தடுக்க பட தயாரிப்புக் குழு டீசரை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.

அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள என்.ஜி.கே டீசரில் இளைய சமுதாயத்தினர் அரசியலில் களமிறங்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, என்.ஜி.கே படத்திற்காகப் பொறுமையாகவும், ஆர்வமாகவும் காத்திருந்த அனைவருக்கும் நன்றிகள். என்.ஜி.கே டீசரை பார்த்து மகிழுங்கள் என கூறியுள்ளார்.

Share this story