சென்னை காவல்துறைக்கு உதவும் தல அஜித்தின் ‘தக்ஷா’ டீம்!

சென்னை காவல்துறைக்கு உதவும் தல அஜித்தின் ‘தக்ஷா’ டீம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறைக்கு உதவியாக தல அஜித்தின் ‘தக்ஷா’ டீம் களமிறங்குகிறது.

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறைக்கு உதவியாக தல அஜித்தின் ‘தக்ஷா’ டீம் களமிறங்குகிறது.

தல அஜித் ஆலோசகராக இருந்த தக்ஷா டீம் உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த மெடிக்கல் எக்ஸ்பிரஸ்– 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியில் பங்கேற்று 2வது இடத்தை தட்டிச் சென்றது. உலகளவில் நடந்த இப்போட்டியின் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ‘தக்ஷா’ டீம், தற்போது தமிழ்நாட்டில் சென்னை மாநகர காவல்துறைக்கு உதவ களமிறங்கியுள்ளது.

சென்னை காவல்துறைக்கு உதவும் தல அஜித்தின் ‘தக்ஷா’ டீம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் கூடும் இடத்திலும், ஷாப்பிங் இடங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தி.நகரில் பாதுகாப்புக்காக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அலைமோதும் தி.நகரில் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தக்ஷா டீமின் ஆளில்லா விமானம் உதவு உள்ளதாக கூறப்படுகிறது.

தல அஜித்தின் ஆலோசனையின் படி தக்ஷா டீம் மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானங்களை தி.நகர் பகுதியில் பறக்கவிட்டு, பொதுமக்களிடம் கைவரிசை காட்டும் ஆசாமிகளை மடக்கி பிடிக்க சென்னை காவல்துறை இந்த ஏற்பாட்டை செய்து வருவதாக தெரிகிறது.

Share this story