ஜூனியர் என்.டி.ஆர்,சிரஞ்சீவி படமே வேண்டாம்.

ஜூனியர் என்.டி.ஆர்,சிரஞ்சீவி படமே வேண்டாம்.

இப்படி ஒரு அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார் பிரபல தெலுங்கு பட இயக்குநர் தேஜா!
கேமராமேனாக சினிமாவுக்கு வந்த தேஜா, சித்திரம் படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். நுவ்வே நேனு, ஜெயம் என நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்து முன்னணிக்கு வந்தவர்.

ஜூனியர் என்.டி.ஆர்,சிரஞ்சீவி படமே வேண்டாம்.

கடந்த ஆண்டு காஜல் அகர்வால்,பெல்லம் கொண்ட சீனிவாஸ் நடித்த ‘சீதா’ என்கிற ஹிட் படம் கொடுத்திருக்கிறார்.அவர்தான் நேற்றைய சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் சேர்ந்து படம் செய்ய எனக்கு விருப்பமில்லை என்று சொல்லி டாலிவுட்டுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.அதுபற்றிய கேள்விக்கு பதில் அளித்தபோது, அவர்கள் இருவரும் அவர்களுடைய தனித்த உலகத்தில் வாழ்கிறார்கள்.

ஜூனியர் என்.டி.ஆர்,சிரஞ்சீவி படமே வேண்டாம்.

அதிலிருந்து எந்த ஒரு சின்ன மாற்றத்துக்கும் உட்பட அவர்கள் தயாரில்லை.அப்படிப்பட்ட நடிகர்களுடன் வேலை செய்ய  எனக்கு விருப்பமில்லை!’ என்று டோலிவுட்டை அதிர வைத்திருக்கிறார். ஏற்கனவே இயக்குநர் தேஜா கோபக்காரர்.படப்பிடிப்பில் சொதப்பும் நடிகர்களை அறைந்து வேலை வாங்குவார் என்பார்கள். அதை எல்லாம் சூப்பர் ஸ்டர்களிடம் காட்ட முடியுமா?.

Share this story