டைகர் செராஃபின் குட்டி ஃபேன்!

டைகர் செராஃபின் குட்டி ஃபேன்!

பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராபின் மகன் டைகர் ஷெராப்! எய்ட் பேக் பாடி பில்டரான டைகர் நடித்திருக்கும் புதிய திரைப்படம் பாகி-3.இப்போதைக்கு நன்றாகப் போய்கொண்டு இருக்கும் இந்தப் படத்தைப் பார்த்த ஒரு குட்டிப் பையன் டைகரின் ரசிகனாகி விட்டான். இத்தனைக்கும் அந்த பையனின் தந்தையே தெலுகில் ஒரு சூப்பர் ஸ்டார்.ஆம்,ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மகன்தான் அந்தச் சிறுவன்.பெயர் அயான்!.

[video:https://www.instagram.com/p/B9v1pxHHUBs/?utm_source=ig_web_copy_link]

தன் மகனின் ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அல்லு அர்ஜுன், தன் ம் கன் டைகர் செராஃபின் என்று எழுதினார். அத்துடன் தன் மகன் வாயில் ‘ ஷெராஃப்’ என்கிற பெயர் நுழையாததால் அவன் டைகர் ஷெராஃபை , டைகர் ஸ்க்வாஷ் என்று அழைப்பதையும் வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்து நெகிழ்ந்து போன டைகர் ஷெராஃப்,பாகி 3 மட்டுமல்ல தன்னுடைய எந்த செட்டுக்கு வேண்டுமானாலும் அயானை வரவேற்பதாக சொல்லி இருக்கிறார்.

 

Share this story