தனுஷ்-சிம்பு இடையே மோதலா ? முட்டிக்கொள்ளும் ரசிகர்கள்…

தனுஷ்-சிம்பு இடையே மோதலா ? முட்டிக்கொள்ளும் ரசிகர்கள்…

தனுஷ்- சிம்பு இடையே மீண்டும் மோதல் உருவாகி உள்ளதா என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

தனுஷ்-சிம்பு இடையே மோதலா ? முட்டிக்கொள்ளும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் முன்னணி ஹீரோக்களிடையே மோதல் இருக்கும். மோதல் என்றால் ஹீரோக்கள் நேரடியாக மோதுவது இல்லை. ரசிகர்களிடையே தான் மோதல் இருக்கும். இரு ஹீரோக்களின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாவது என்றாலே அதை நேரடியாக பார்க்கலாம். ஒரு சிறு தீப்பொறி கிடைத்தாலே போதும் அது தீயாய் கொளுந்துவிட்டு எரியும்.

தனுஷ்-சிம்பு இடையே மோதலா ? முட்டிக்கொள்ளும் ரசிகர்கள்…

இது எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜீத் ரசிகர்கள் வரை இந்த மோதல் போக்கு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இருப்பவர்கள் தனுஷ்-சிம்பு. சில வருங்களுக்கு தனுஷ்- சிம்பு படங்கள் வந்தாலே பிரச்சனைதான். நேரடியாக மோததாத அவர்கள் திரைப்பட வசனங்கள் மூலம்தான் மோதிக்கொள்வார்கள். அதனால் அந்த மோதல் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்.

தனுஷ்-சிம்பு இடையே மோதலா ? முட்டிக்கொள்ளும் ரசிகர்கள்…

தனுஷ் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து அடுத்தடுத்து பிசியாக இருக்கிறார். ஆனால் சிம்பு நீண்ட நாட்களாக நடிப்பு இடைவெளிவிட்டு தற்போதுதான் ஈஸ்வரன் நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தில் சிம்பு பேசிய வசனம்தான் பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது. அந்த வசனத்தில் “நீ அழிக்க வந்த அசுரன் என்றால், நான் காக்க வந்த ஈஸ்வரன்டா” என ஆக்ரோஷமான காட்சியில் நடித்திருப்பார். இந்த வசனத்தை பார்த்த தனுஷ் ரசிகர்கள், வேண்டுமென்ற சிம்பு வம்புக்கு இழுக்கிறார் என சமூக வலைத்தளத்தில் கருத்தை தெரிவித்து வந்தனர்.

தனுஷ்-சிம்பு இடையே மோதலா ? முட்டிக்கொள்ளும் ரசிகர்கள்…

இதற்கு தனுஷ் எந்த பதிலும் கொடுக்காமல் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்க பயோவில் தனது பெயருக்கு கிழே Asuran / Actor என்று மாற்றியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் சிம்புக்கு பதிலளிக்கும் விதமாகதான் பயோவை மாற்றியுள்ளார் தனுஷ் என்று சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ்-சிம்பு இடையே மோதலா ? முட்டிக்கொள்ளும் ரசிகர்கள்…

இந்நிலையில் மீண்டும் தனுஷ்-சிம்பு மோதல் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் Asuran Dhanush என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட்டாகி வருகிறது. முன்புயெல்லாம் திரையரங்கில் ரசிகர்களிடையே ஏற்பட்ட சண்டை என நிலைமாறி, டிஜிட்டல் இந்தியாவில் சமூகவலைத்தளம் என மாறிவிட்டது.

Share this story