தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள்?

தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள்?

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை: பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் தனது சினிமா பயணத்தை துவக்கி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஸ்ரீதேவியின் மரணத்துக்கு பின் அவரது மூத்த மகள் ஜான்வி, பாலிவுட்டில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

இதையடுத்து கரண் ஜோகர் இயக்கத்தில் ‘டக்த்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ரன்வீர் சிங், விக்கி கௌஷால், கரீனா கபூர், பூமி பட்நேகர், அணில் கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

JhanviKapoor

இதனிடையே, தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஜான்வி கபூர் அறிமுகமாகவிருப்பதாக கூறப்படுகிறது. 2 தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஜான்வியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் ஒரு படத்தில் அர்ஜுன் ரெட்டி சென்சேஷன் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Share this story