தமிழ் சினிமா சந்திக்கும் கே.டி.எம் சவால்: ‘96’ முதல் ஷோவும் ரத்து?

தமிழ் சினிமா சந்திக்கும் கே.டி.எம் சவால்: ‘96’ முதல் ஷோவும் ரத்து?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்துள்ள ‘96’ படத்தின் முதல் ஷோ ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்துள்ள ‘96’ படத்தின் முதல் ஷோ ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கோலிவுட்டில் ஒவ்வொரு வார இறுதியிலும் 4-5 திரைப்படங்கள் ரிலீசாகின்றன. வழக்கமாக ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் அதிகாலையில் முதல் ஷோ ரசிகர்களுக்காக திரையிடப்படும். தற்போது தமிழ் சினிமாவில் ரிலீசாகும் பெரும்பாலான திரைப்படங்களுக்கு முதல் ஷோ திரையிடப்படுகிறது.

சமீபகாலமாக முதல் ஷோ ரிலீசாவதில் தொடர்ச்சியாக சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ‘சீமராஜா’, ‘சாமி 2’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்களின் முதல் ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படத்தை பார்க்க அதிகாலையில் திரையரங்குகளின் வாசலில் குவிந்து ஏமாற்றம் அடைந்தனர்.

கே.டி.எம் பிரச்னை காரணமாக முதல் ஷோவுக்கு புக் செய்த டிக்கெட்களின் விலையும் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். இது திரைப்படத்தின் விமர்சனம் மற்றும் வசூலை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா சந்திக்கும் கே.டி.எம் சவால்: ‘96’ முதல் ஷோவும் ரத்து?

இந்நிலையில், இன்று ரிலீசாகும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்துள்ள ‘96’ திரைப்படம் அதிகாலை 6 மணிக்கு முதல் ஷோ ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே கே.டி.எம் லைசன்ஸ் பிரச்னை காரணமாக முதல் ஷோ ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது ’96’ திரைப்படம் வழக்கமான 9 மணி காட்சியில் அனைத்து திரையரங்குகளிலும் ரிலீசாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story