தல அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு!

தல அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு!

தல அஜித்தின் ஆலோசனையில் மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் பரிசு பெற்றதையடுத்து, அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை: தல அஜித்தின் ஆலோசனையில் மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் பரிசு பெற்றதையடுத்து, அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா என்ற மாணவர் குழுவினர், நடிகர் அஜித்தின் ஆலோசனையின்படி உருவாகிய ஆளில்லா விமானம் சுமார் 6 மணிநேரம் விண்ணில் பறந்து, உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்தது. கல்லூரிகளுக்குள் நடந்த இந்த போட்டியில் முதல் இடத்தையும் அஜித்தின் தக்ஷா டீம் தட்டிச் சென்றது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாந்தில் ஆளில்லா விமானம் தொடர்பான மெடிக்கல் எக்ஸ்பிரஸ்– 2018 யுஏவி சேலஞ்ச் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளில் இந்தியாவின் ‘தக்ஷா’ டீம் இரண்டாவது இடத்தைப்பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.

தல அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு!

அஜித்தின் ஆலோசனையின் படி எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்றுள்ளது. இதையடுத்து, மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி, இந்த விமானத்தை தயாரிக்க உறுதுணையாக இருந்த நடிகர் அஜித்குமாருக்கு, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ajith

நடிப்பையும் தாண்டி உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள தல அஜித்திற்கும், அஜித்தின் ஆலோசனைகளை கொண்டு இந்த சாதனையை நிகழ்த்திக்காட்டிய மாணவர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

Share this story