தல அஜித்துக்கு பாடல் பாடிய சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்!

தல அஜித்துக்கு பாடல் பாடிய சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘அடிச்சி தூக்கு’ பாடலையும் ரசிகர்கள் கொண்டாடினர்.

தல அஜித்துக்கு பாடல் பாடிய சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்!

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரும், நாட்டுப்புற பாடகருமான செந்தில் கணேஷ் ஒரு பாடலை பாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘சீமராஜா’ படத்தில் இமான் இசையில் ‘பராக் பராக்’ பாடலை பாடியுள்ளார். அதைத் தொடர்ந்து அம்ரீஷ் இசையில் செந்தில் கணேஷ் பாடிய ‘சின்ன மச்சான்’ பாடலும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

தற்போது தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தில் ஒரு குத்து பாடலை செந்தில் கணேஷ் பாடியிருப்பதாக கூறப்படுகிறது. ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

Share this story