‘தல 59’: அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் ‘தீரன்’ இயக்குநர்!

‘தல 59’: அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் ‘தீரன்’ இயக்குநர்!

தல அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குநர் ஹெச். வினோத் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: தல அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குநர் ஹெச். வினோத் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவிருக்கும் இப்படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அஜித் நடித்த ‘வரலாறு’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க படக்குழு முடிவு  செய்துள்ளது.

தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ’விஸ்வாசம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story