தளபதி விஜய்யை பின்னுக்கு தள்ளிய தல அஜித்: எப்படி தெரியுமா?

தளபதி விஜய்யை பின்னுக்கு தள்ளிய தல அஜித்: எப்படி தெரியுமா?

யூடியூபில் சிம்டாங்காரன் பாடல் பெற்ற லைக்ஸ்களை விட அடிச்சுத்தூக்கு பாடல் அதிக லைக்குகளை பெற்றுள்ளது.

சென்னை: யூடியூபில் சிம்டாங்காரன் பாடல் பெற்ற லைக்ஸ்களை விட அடிச்சுத்தூக்கு பாடல் அதிக லைக்குகளை பெற்றுள்ளது.

இயக்குநர் சிவா -அஜித் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள அடிச்சுத்தூக்கு பாடல் கடந்த 23-ம் தேதி யூடியூபில் வெளியானது. வெளியானது முதலே பார்வையாளர்கள், லைக்ஸ் என அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பாடல் வெளியான 5 நாட்களில் 4.8 மில்லியன் பார்வையாளர்களையும் 3 லட்சத்து 68 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.  கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி வெளியான சிம்டாங்காரன் பாடல் 33 மில்லியன் பார்வையாளர்களையும் 3 லட்சத்து 64 ஆயிரம் லைக்ஸ்களையும் தற்போது வரை பெற்றுள்ளது.

இதன் மூலம் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன் பாடல் பெற்ற லைக்ஸ்களை அஜித்தின் அடிச்சித்தூக்கு பாடல் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this story