‘தளபதி 63’ – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்!

‘தளபதி 63’ – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்!

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயரை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயரை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

‘தெறி’, ‘மெர்சல்’, படங்களை தொடர்ந்து 3வது முறையாக அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருக்கிறார். ‘தளபதி 63’ என்று தர்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசையமைக்கிறார். ‘மெர்சல்’, ‘சர்கார்’ படத்தை தொடர்ந்து 3வதாக விஜய்-ரகுமான் கூட்டணியும் இணைந்துள்ளது.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் 20வது திரைப்படமான ‘தளபதி 63’ திரைப்படம் இவர்கள் இதுவரை தயாரித்த திரைப்படங்களில் பிரம்மாண்டமான படமாகும். அதிக பொருட்செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தில் மெர்சல் பட தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.

‘தளபதி 63’ படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அப்படத்தின் பெயர் ‘தளபதி 63’ என்றே வைக்கப்படுவதாக அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Share this story