‘தளபதி 63’ – “மெர்சலா தெறிக்க விடு மச்சி” என வாழ்த்திய பிரபலம்!

‘தளபதி 63’ – “மெர்சலா தெறிக்க விடு மச்சி” என வாழ்த்திய பிரபலம்!

நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அட்லீக்கு பிரபல காமெடி நடிகர் சதீஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அட்லீக்கு பிரபல காமெடி நடிகர் சதீஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘தெறி’, ‘மெர்சல்’, படங்களை தொடர்ந்து 3வது முறையாக அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருக்கிறார். ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக்க அழைக்கப்படும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசையமைக்கிறார். ‘மெர்சல்’, ‘சர்கார்’ படத்தை தொடர்ந்து 3வதாக விஜய்-ரகுமான் கூட்டணியும் இணைந்துள்ளது.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் 20வது திரைப்படமான ‘தளபதி 63’ திரைப்படம் இவர்கள் இதுவரை தயாரித்த திரைப்படங்களில் பிரம்மாண்டமான படமாகும். அதிக பொருட்செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தில் மெர்சல் பட தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் அட்லீக்கு நடிகர் சதீஷ் ட்விட்டரில், “மெர்சலா தெறிக்க விடு மச்சி” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, குஷியாக வலம் வரும் விஜய் ரசிகர்களுக்கு, சதீஷின் இந்த ட்வீட் கூடுதல் உற்சாகமாக அமைந்துள்ளது.
 

Share this story