தூக்குதுரை யாருன்னு தெரியுமா? வரலாற்றை திரும்பிப் பார்க்க வைத்த தல அஜித்!

தூக்குதுரை யாருன்னு தெரியுமா? வரலாற்றை திரும்பிப் பார்க்க வைத்த தல அஜித்!

‘விஸ்வாசம்’ படத்தில் தல அஜித் நடித்துள்ள தூக்குதுரை யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ‘விஸ்வாசம்’ படத்தில் தல அஜித் நடித்துள்ள தூக்குதுரை யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில், தூக்குதுரை எனும் கதாபாத்திரத்தின் பெயர் மோஷன் போஸ்டரில் இடம்பெற்று ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதைத் தொடர்ந்து தூக்குதுரை யார் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் கூகுள் செய்ததையடுத்து, அவரது வரலாறு குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியை ஆண்ட 24ம் ஜமீன்தார் தான் தூக்குதுரை. ஆங்கிலேயர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட தனது நண்பனை காப்பாற்ற, சிறை காவலரை கொலை செய்து, அந்த குற்றத்திற்காக தூக்கு தண்டனைக்கு ஆளானவர். தூக்குதுரையின் தியாகத்தை மதிக்கும் விதமாக சிங்கம்பட்டி ஜமீன்தார்கள், தங்களது அரண்மனைக்கு பின்புறம் மகாதேவர் கோயிலை கட்டி அவரை வணங்கி வருகின்றனர்.

இந்த கோயிலில் உள்ள தூணில் தூக்குத்துரை என்கிற பெரியசாமி தேவர் சிலை வடக்கு நோக்கி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. முறுக்கு மீசை, மிடுக்கான தோற்றம், கூர்மையான கண்கள் என முண்டாசுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் தூக்குதுரையை போல் ‘விஸ்வாசம்’ மோஷன் போஸ்டரில் அஜித்தின் தோற்றமும் அமைந்துள்ளது.  

இதுவரை தூக்குதுரை என்றால் யாரென்று தெரியாமல் இருக்கையில், அஜித், அவரது வரலாறு குறித்து அறிய கூகுளில் தேட வைத்திருப்பதாக தல ரசிகர்கள் கூறி வருகின்றனர். எனினும், நண்பனுக்காக உயிர் தியாகம் செய்த தூக்குதுரையின் கதையை மையமாக வைத்து உருவானதா ‘விஸ்வாசம்’? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share this story