தொடரும் வியாழன் செண்டிமெண்ட்: தல அஜித்தின் ’விஸ்வாசம்’ அப்டேட்!

தொடரும் வியாழன் செண்டிமெண்ட்: தல அஜித்தின் ’விஸ்வாசம்’ அப்டேட்!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, படங்களை தொடர்ந்து 4வது முறையாக அஜித்-சிவா கூட்டணியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. பக்கா ஃபேமிலி எண்டர்டெய்ன்மென்ட் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை (25.10.2018) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ரிலீஸாகவுள்ளது. அஜித் நடிப்பில் சிவா இயக்கிய அனைத்து திரைப்படங்களின் முக்கிய அறிவிப்புகளும், ரிலீசுகளும் வியாழக்கிழமையில் தான் நடந்து வருகிறது.

அதேபோல், ‘விஸ்வாசம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வியாழக்கிழமையில் ரிலீசாகவுள்ளது. ‘விஸ்வாசம்’ படம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லமால் இருந்த நிலையில், இந்த மாஸ் அப்டேட் தல ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்காக ‘விஸ்வாசம்’ ரிலீஸ் பொங்கல் ரேசில் இருந்து பின்வாங்கும் என கூறப்பட்ட நிலையில், ‘விஸ்வாசம்’ ஷூட்டிங் பணிகளை முடித்த சிவா இறுதிக்கட்ட பணிகளையும் துவங்கிவிட்டார். ‘விஸ்வாசம்’ படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முடித்துவிட்டதாகவும், தற்போது மும்பையில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகைக்கே விஸ்வாசம் ரிலீசாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story