தொலைக்காட்சி ஒளிபரப்பில் சாதனை நிகழ்த்திய தனுஷின் பட்டாஸ்..

தொலைக்காட்சி ஒளிபரப்பில் சாதனை நிகழ்த்திய தனுஷின் பட்டாஸ்..

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில்  பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பட்டாஸ். திரைக்கு வந்து வசூல் ரீதியில் பெரும் சாதனையை நிகழ்த்தியது. செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தனுஷுடன் , சிநேகா, மெஹ்ரீன், நவீன் சந்திரா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெற்ற சன் டிவி கடந்த மே மாதம் முதல் தேதி  தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.  இந்தத்  திரைப்படம் 1,31,49, 000 பார்வையாளர்களை ஈர்த்து மாபெரும் சாதனை செய்திருக்கிறது. இதுவரை தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்த படம் என்ற சாதனையையும் பட்டாஸ் நிகழ்த்தியிருக்கிறது. 

தொலைக்காட்சி ஒளிபரப்பில் சாதனை நிகழ்த்திய தனுஷின் பட்டாஸ்..

குடும்பம் முழுமைக்குமான தரமான பொழுதுபோக்குப் படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத் தயாரிப்பில் வெளியான அஜித் குமார் நடித்த விஸ்வாசம் தொலைக்காட்சி ஒளிபரப்பில் 18.2 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது. அந்த வாரம் ஒளிபரப்பான் ஐபிஎல் போட்டிக்கு கிடைத்த பார்வையாளர்களைவிட  இந்தப் படத்தின் பார்வையாளர்களின்  எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதேபோல் இந்த நிறுவன குடும்பத்தைச் சார்ந்த மற்றொரு நிறுவனத்தின் தயாரிப்பான பாஷா படம் 2000 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி  இமாலய சாதனையை நிகழ்த்தியது குறிப்படத்தக்கது.

தொலைக்காட்சி ஒளிபரப்பில் சாதனை நிகழ்த்திய தனுஷின் பட்டாஸ்..

இந்நிலையில், பாட்டாஸ் திரைப்படத்தின் சாதனை குறித்து சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் கூறியதாவது, “எந்த வகைப் படம் என்றாலும் குடும்பம் முழுமைக்குமான தரமான பொழுது போக்கு என்பதுதான் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தாரக மந்திரம். சர்வதேச ரசிகர்களையும் மகிழ்விக்கும் விதமான நல்ல படங்களைத் தர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். மேலும் பட்டாஸ் படத்தில் இரட்டை வேடங்களில் தனுஷ் அற்புதமாக நடித்திருந்தது படத்தின் சிறப்பம்சமாக அமைந்ததுடன், அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இந்த வெற்றிச் சாதனையை எங்களுக்கு பரிசாகக் கொடுத்த பட்டாசு படத்தில் நடித்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்புக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

தொலைக்காட்சி ஒளிபரப்பில் சாதனை நிகழ்த்திய தனுஷின் பட்டாஸ்..

Share this story