நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயரா? நடிகர் விஷால் விளக்கம்!

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயரா? நடிகர் விஷால் விளக்கம்!

நடிகர் சங்க கட்டிடத்திற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் வைக்கப்படுமா என்று கேள்விக்கு நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார்.

சென்னை: நடிகர் சங்க கட்டிடத்திற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் வைக்கப்படுமா என்று கேள்விக்கு நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் விஷால் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ‘ஜெயலலிதா செய்த நல்ல விஷயங்கள் இன்னும் மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. அவருக்கான நினைவிடம் சிறப்பாக கட்டப்பட்டு, மக்கள் வந்து பார்த்துச் செல்ல வேண்டும். ஜெயலலிதாவின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. வாழும் போது எப்படி சிரித்துக் கொண்டிருந்தாரோ, அதேபோல், அவரது ஆத்மாவும் சாந்தி அடைய வேண்டும். நடிகர் சங்க கட்டட திறப்பு விழாவின் போது வருகிறேன் என எங்களிடம் கூறியிருந்தார். ஆனால், அவர் இல்லாதது மிகவும் வருத்தமாக உள்ளது’ என்று தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் விஷாலிடம், நடிகர் சங்க கட்டடத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்கப்படுமா?என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘தனிப்பட்ட முறையில் என்னால் முடிவு எடுக்க முடியாது. எல்லோரும் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுப்போம். ஜெயலலிதாவைப் போல், கருணாநிதியும் சினிமா துறையில் முக்கிய பங்கு வகித்துள்ளார்’ என்று குறிப்பிட்டார்.

Share this story