நடிகர் சிம்புவின் ‘பெரியார் குத்து’ நாளை ரிலீஸ்! – உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் சிம்புவின் ‘பெரியார் குத்து’ நாளை ரிலீஸ்! – உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் சிம்பு நடித்திருக்கும் ‘பெரியார் குத்து’ ஆல்பம் நாளை வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் சிம்பு நடித்திருக்கும் ‘பெரியார் குத்து’ ஆல்பம் நாளை வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

‘செக்க சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி, நடனம், பாடல்களிலும் சிம்புவுக்கு விருப்பம் அதிகம் என்பதால் அடிக்கடி ஆல்பங்களை வெளியிடுவதை சிம்பு வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில், ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பில் ‘பெரியார் குத்து’ என்ற ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார் சிம்பு.

தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தை ரெபெல் ஆடியோ நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. 

இந்நிலையில், இந்த ஆல்பம் நாளை வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, சிம்பு திரைப்படம் வெளியாவதற்கு இணையாக அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாட்டங்களைத் துவக்கியுள்ளனர். சிம்பு ரசிகர்களுக்கு செம ட்ரீட் வெய்டிங்! என்பது மட்டும் தெரிகிறது.
 

Share this story