நடிகர் சூரியின் மகனுக்கு ‘பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்’ விருது: ரசிகர்கள் வாழ்த்து!

நடிகர் சூரியின் மகனுக்கு ‘பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்’ விருது: ரசிகர்கள் வாழ்த்து!

இதை தொடர்ந்து சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சூரி. இதை தொடர்ந்து சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

நடிகர் சூரியின் மகனுக்கு ‘பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்’ விருது: ரசிகர்கள் வாழ்த்து!

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 168, கதிருடன் நடிக்கும் ’சர்பத்’, வெற்றிமாறன் இயக்கும் படம் என கைவசம் படங்கள்  குவிந்துள்ளது. ஒருபுறம் நடிப்பு மற்றொரு புறம் ஹோட்டல் பிசினஸ் என படு பிசியாக  வலம்வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சூரி தனது பேஸ்புக் பக்கத்தில் மகன் சஞ்சய் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், மதுரை கிரிக்கெட் அசோசேஷன் சார்பில் நடைபெற்ற 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று ’பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்’ விருது பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  இதை தொடர்ந்து சூரியின் மகன் சஞ்சய்க்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். 
 

Share this story