நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நான் அதனைப் பெரிதும் வரவேற்கிறேன் : இயக்குநர் அமீர் பேட்டி!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நான் அதனைப் பெரிதும் வரவேற்கிறேன் : இயக்குநர் அமீர் பேட்டி!

நடிகர் விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ள, மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

கடந்த 5 ஆம் தேதி பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் வீடு, சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட 20 இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பான புகார் வந்ததால் வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ள மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். 

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நான் அதனைப் பெரிதும் வரவேற்கிறேன் : இயக்குநர் அமீர் பேட்டி!

அதன் பின்னர், சென்னையில் உள்ள விஜய்யின் பண்ணை வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் அவரின் மனைவி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 7 ஆம் தேதி சோதனை முடிவடைந்ததால் விஜய் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்புக்காக மீண்டும் நெய்வேலிக்கு சென்றார். அப்போது பாஜகவினர் நெய்வேலியில் நடந்து வரும் மாஸ்டர் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குக் கூடிய போலீசார், அவர்கள் மீது தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர். இதனால் சற்று பரபரப்பு நிலவியது. 

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், “பா.ஜ.க தமிழகத்தில் ஜெயிப்பதற்கு விஜய் எதிராக இருப்பார் என்று எண்ணித் தான் பா.ஜ.கவினர் போராட்டம் நடத்துகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் போராட்டம் நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் அரசியலுக்கு வந்தால் அதனை நான் மிகவும் வரவேற்கிறேன். அவருக்குத் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் அவரை வளரச் செய்யுமே தவிரப் பின்னடைவைத் தராது” என்று கூறினார். 

Share this story