"நடிகைகளோடு டேட்டிங் பண்ண ஆசையா" -வெப்சைட்டில் போலி விளம்பரம்- பாகுபலி நடிகை போலீசில் புகார்..

"நடிகைகளோடு டேட்டிங் பண்ண ஆசையா"  -வெப்சைட்டில் போலி விளம்பரம்- பாகுபலி நடிகை போலீசில் புகார்..

நடிகைகளின் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் பல்வேறு காரணங்களுக்காக சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சில நடிகைகளின் படங்கள் பல்வேறு டேட்டிங் வெப்சைட்டில் மோசடி செய்யப்படுகின்றன. இளைஞர்கள் பொதுவாக இணையத்தில், குறிப்பாக டேட்டிங் வெப்சைட்டில் நிறைய நேரம் செலவிடுகிறார்கள்.

"நடிகைகளோடு டேட்டிங் பண்ண ஆசையா"  -வெப்சைட்டில் போலி விளம்பரம்- பாகுபலி நடிகை போலீசில் புகார்..

பெரும்பாலான டேட்டிங் வெப்சைட்டுகள்  போலி விவரங்களை பதிவேற்றுகின்றன அல்லது  அழகான நடிகைகளின் படங்களை வைத்து இளைஞர்களை ஈர்க்க முயற்சிக்கின்றன. மேலும் அந்த நடிகைகளுடன் டேட்டிங் போகலாம் என்று இளைஞர்களை  ஏமாற்றி  பணம் சம்பாதிக்கும் சில வெப்சைட்டுகள்  இணையத்தில் உள்ளன.
அப்படி ஏமாற்றும் விதமாக பாகுபலி படத்தில் நடித்த அஷ்ரிதா வேமுகந்தி என்ற நடிகையின் படத்தை பயன்படுத்தி டேட்டிங் வெப்சைட் அவரோடு டேட்டிங்கு ஏற்பாடு செய்வதாக கூறி பணம் சம்பாதித்துள்ளது.

"நடிகைகளோடு டேட்டிங் பண்ண ஆசையா"  -வெப்சைட்டில் போலி விளம்பரம்- பாகுபலி நடிகை போலீசில் புகார்..
அந்த  டேட்டிங் தளத்தின் விளம்பரமும் அந்த நடிகையின் படத்தோடு , பேஸ்புக்கில் தோன்றியது. இது குறித்து பாகுபலி நடிகைக்கு தகவல் கொடுத்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அஷ்ரிதா வேமுகந்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். அந்த டேட்டிங் வெப்சைட் மீது  நடவடிக்கை எடுக்க அவர் சைபர் கிரைம் போலீஸை அணுகினார்.

Share this story