நயன்தாரா இப்படித்தான்: ராதிகா சரத்குமார் ஓபன் ட்வீட்!

நயன்தாரா இப்படித்தான்: ராதிகா சரத்குமார் ஓபன் ட்வீட்!

தைரியமாகவும் தனித்துவமாகவும் படங்களைத் தேர்வு செய்வதால் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கலாம் என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: தைரியமாகவும் தனித்துவமாகவும் படங்களைத் தேர்வு செய்வதால் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கலாம் என்று  நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது நயன்தாரா, ராதிகா சரத்குமார், சிவகார்த்திகேயன் மூவரும் இணைந்து செல்பி எடுத்துள்ளனர். அதை ராதிகா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு  நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ரசிகர்  ஒருவர், ‘நீங்கள் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அடைமொழி கொடுத்து அழைப்பதை ஏற்க முடியவில்லை. எங்களுக்கு 80-களில் வாழ்ந்த நடிகைகள் தான் சூப்பர்ஸ்டார்கள். அத்துடன் அது முடிந்துவிட்டது. அதற்குப் பின் சூப்பர் ஸ்டார்கள் இல்லை’ என்று  குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பதிலளித்துள்ள  ராதிகா சரத்குமார், ‘நன்றி. நிலையில்லாத சினிமாவில் நயன்தாரா தனது வெற்றியைத் தக்கவைத்துள்ளார். பலரும் தேர்ந்தெடுக்காத பாதையைத் தைரியமாகவும் தனித்துவமாகவும் அவர் தேர்வு செய்து வருகிறார். அதனால் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

Share this story