"நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர்" : தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன உதயநிதி

"நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர்" : தளபதி விஜய்க்கு  பிறந்தநாள் வாழ்த்து சொன்ன உதயநிதி

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தளபதியாக இருக்கிறார். ஆண்டுக்கு ஒருபடம் கொடுத்தாலும் அவரின் கிரேஸ் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. வெற்றி, தோல்வி என வாழ்க்கையில்  படிப்படியாக முன்னேறிய தளபதி விஜய்க்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது அவரது ரசிகர்கள். நடிகர் விஜய்  46வது பிறந்தநாளை  இன்று கொண்டாடுகிறார். இதனால் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் , பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

"நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர்" : தளபதி விஜய்க்கு  பிறந்தநாள் வாழ்த்து சொன்ன உதயநிதி

இந்நிலையில்  நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்… என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் விஜய் இயக்குநர் தரணி இயக்கத்தில் குருவி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Share this story