நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது ஜான்வி கபூரின் ‘குன்ஜன் சக்ஸேனா’ திரைப்படம்…

நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது ஜான்வி கபூரின் ‘குன்ஜன் சக்ஸேனா’ திரைப்படம்…

ஜான்வி கபூர் நடித்திருக்கும் ‘குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமலில் இருந்துவரும் ஊரடங்கால்  திரைத்துறையும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மார்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து வெளியீட்டுக்காகக் காத்திருந்த படங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் பல தயாரிப்பாளர்கள் பொருளாதார ரீதியாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். இத்தகைய சூழலில் படங்களை நேரடியாக டிஜிட்டல் தளங்களில்  வெளியிடும் புதிய நடைமுறை வந்துள்ளது. 

நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது ஜான்வி கபூரின் ‘குன்ஜன் சக்ஸேனா’ திரைப்படம்…

இதில் திரையரங்க உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பை  மீறி, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் முதலில் வெளியானது. அதனைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேசின் பென்குயின், இந்தியில் அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சிடோபோ, வித்யாபாலனின் சகுந்தலா தேவி, கன்னடத்தில் உருவான பிரெஞ்சு பிரியாணி, மலையாளத்தில் தயாரான சூவியும் சுஜாதாவும் ஆகிய படங்கள் அமேசான் தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. 

நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது ஜான்வி கபூரின் ‘குன்ஜன் சக்ஸேனா’ திரைப்படம்…

அதேபோல் அட்லி தயாரிப்பில் உருவாகியிருக்கும் அந்தகாரம், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடெலாவின் வெர்ஜின் பாணுப்பிரியா போன்ற படங்கள் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது இந்திய விமானப் படையில் விமானியாக இருந்த குன்ஜன் சக்ஸேனாவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது ஜான்வி கபூரின் ‘குன்ஜன் சக்ஸேனா’ திரைப்படம்…

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்   நடித்திருக்கும் இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸும், ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. சரண் சர்மா இயக்கியிருக்கும் இந்தப் படம், 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின்போது இந்திய ராணுவ வீரர்களைக் காப்பாற்றிய பெண் விமானி குஞ்சன் சக்ஸேனாவைப் பற்றியது. போரின்போது தீரமாகச் செயல்பட்டதற்காக ஷௌர்ய வீர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. முன்னதாக, ஏப்ரல் 24-ம் தேதி அன்று இந்தப் படத்தை அரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவும் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.

இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நெட்ஃப்ளிக்ஸ் தரப்பு, தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தைப் பற்றிய ஒரு காணொலியைப் பகிர்ந்து, விரைவில் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று பகிர்ந்துள்ளது.  படம் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது ஜான்வி கபூரின் ‘குன்ஜன் சக்ஸேனா’ திரைப்படம்…

Share this story