பத்மாவதி இயக்குனர் தயாரிப்பில் 7G ரெயின்போ காலனி

பத்மாவதி இயக்குனர் தயாரிப்பில் 7G ரெயின்போ காலனி

செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 7G ரெயின்போ காலனி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனை பத்மாவதி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 7G ரெயின்போ காலனி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனை பத்மாவதி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.

காதல் கொண்டேன் படத்தின் வெற்றிக்கு பிறகு செல்வராகவன் இயக்கிய திரைப்படம் 7G ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான இத்திரைப்படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி இத்திரைப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் ரீமேக் செய்யப்படவுள்ளது.

பத்மாவதி புகழ் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் மங்கேஷ் ஹதாவலே இயக்குகிறார். இதற்கு ‘மலால்’ என பெயரிடப்பட்டுள்ளது.

Share this story