பாராட்டு மழையில் ‘பரியேறும் பெருமாள்’: மக்களின் பேராதரவினால் கூடுதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

பாராட்டு மழையில் ‘பரியேறும் பெருமாள்’: மக்களின் பேராதரவினால் கூடுதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

‘காலா’ இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சென்னை: ‘காலா’ இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கதிர், கயல் ஆனந்தி மற்றும் சில புதுமக நடிகர்கள் நடித்துள்ள இப்படத்துக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்துக்கு சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பட பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதன் காரணமாகவே இப்படத்துக்கு ஏகப்பட்ட விளம்பரம் கிடைத்துள்ளது.

இத்தனை ஆதரவு கிடைத்துள்ள இப்படத்துக்கு போதிய திரையரங்குகள் கிடைக்காததால் வசூல் போதுமான அளவிற்கு இல்லை. இதனால் மக்களின் ஆர்வத்தை பார்த்து கூடுதல் திரையரங்குகளில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாராட்டு மழையில் ‘பரியேறும் பெருமாள்’: மக்களின் பேராதரவினால் கூடுதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

ஆணவக் கொலைகள் விபத்துக்களாகவும், தற்கொலைகளாகவும் சித்தரிக்கப்பட்டு மூடி மறைக்கப்படுவதை, வன்மத்தை தூண்டாமல் நடுநிலையாகவும், மிக எளிமையாகவும் சொல்லப்பட்டிருக்கும் திரைப்படம்  ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தை பார்க்க வேண்டும் என பாலிவுட் உச்ச நட்சத்திரங்களான அமீர்கான், அமிதாப் பச்சனுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் போன்றவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜாதிய ஏற்றத்தாழ்வு குறித்த கொடுமைகளை நுணுக்கமாக பேசும் இப்படத்துக்கு குறைவான திரையரங்குகளை ஒதுக்கி, படத்தை பார்க்கவிடாமல் தடுப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share this story