பிக்பாஸ் லவ் பர்ட்ஸின் புத்தாண்டு கொண்டாட்டம்:வைரலாகும் புகைப்படங்கள்

பிக்பாஸ் லவ் பர்ட்ஸின் புத்தாண்டு கொண்டாட்டம்:வைரலாகும் புகைப்படங்கள்

பிக் பாஸ் மூலம் பிரபலம் ஆன ஓவியா மற்றும் ஆரவ் இணைந்து புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகியள்ளது

சென்னை: பிக் பாஸ் மூலம் பிரபலம் ஆன ஓவியா மற்றும் ஆரவ் இணைந்து புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகியள்ளது

பிக் பாஸ் முதல் சீசன் மூலம் பங்கேற்ற ஓவியா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.பின்பு தன்னுடைய சக போட்டியாளரான ஆரவ் மீது காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்ததால் போட்டியைவிட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வென்ற ஓவியா,மக்களிடம் பேராதரவு கிடைத்தது. அதன் முலம் ஓவியாவுக்கென இளைஞர்கள் தனி ஆர்மியை உருவாக்கிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.தற்போது ஓவியாவும், ஆரவும் சகஜமாக பழகி வரும் நிலையில்,அவர்கள் காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் லவ் பர்ட்ஸின் புத்தாண்டு கொண்டாட்டம்:வைரலாகும் புகைப்படங்கள்

இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில்இப்போது இந்த வருடம் அமைதியாக முடியும் என நம்புகிறேன்என பதிவிட்டுள்ளார்.மேலும் #Araviya என இரண்டு பேரின் பெயரையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளார்.

அதனால் இருவரும் இதன் மூலம் காதலை உறுதி செய்துள்ளார்களா எங்கிற சந்தேகம் ஓவியா ஆர்மி மனதில் எழுந்துள்ளது.

Share this story