பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் நித்யா-மும்தாஜ் இடையே வெடித்த மோதல்!

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் நித்யா-மும்தாஜ் இடையே வெடித்த மோதல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது.

விஜய் டிவியில் கடந்த 105 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நேற்றுடன் முடிந்தது. பிக் பாஸ் சீசன் 2-வின் டைட்டிலை ரித்விகா வென்றார். இரண்டாவது இடத்தை பிக் பாஸின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா தட்டிச் சென்றார்.

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் நித்யா-மும்தாஜ் இடையே வெடித்த மோதல்!

இதனிடையே, பிக் பாஸ் 2 போட்டியாளர்களிடம், அவர்களது குடும்பத்தினர் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு போட்டியாளர்களும் பதிலளித்தனர். ஒரு மாதிரியாக போய்க்கொண்டிருந்த இந்த கேள்வி பதில் செஷனில், மும்தாஜின் அண்ணன் நித்யாவிடம் சில கேள்விகளை எழுப்பினார். இதனால், மும்தாஜிற்கும் நித்யாவுக்கும் நேரடியாக மோதல் வெடித்தது.

மும்தாஜ் மீது விரோதத்தையும், வன்மத்தையும் வளர்க்க என்ன காரணம் என அவரது அண்ணன் நித்யாவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த நித்யா மும்தாஜ் ஆர்மியினர் தன்னை தரக்குறைவாக பேசியதாகவும், பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, பிரிந்திருக்கும் கணவன் மனைவிக்குள் அப்படி என்ன பிரச்னை என்பதை தெரிந்துக் கொள்ள மும்தாஜ் ஆர்வம் காட்டியதாகவும் குற்றம்சாட்டினார்.

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் நித்யா-மும்தாஜ் இடையே வெடித்த மோதல்!

இதற்கு இடைமறித்து பதில் கூறிய மும்தாஜ், உங்களது சொந்த வாழ்க்கையை பொது இடத்திற்கு கொண்டு வந்ததால் அதை பற்றி நானும் பேச நேரிட்டது. உங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அன்பின் காரணமாகத்தான் அதைப்பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ள முயற்சித்ததாக கூறினார். மேலும், அன்பையும், அமைதியையும் விரும்புபவள் நான் எனது ரசிகர்களோ என்னை நேசிப்பவர்களோ யாரையும் இழிவாக பேச வேண்டாம் என்றுக் கேட்டுக் கொண்டதுடன், அதற்காக நித்யாவிடம் பெருந்தன்மையாக மன்னிப்புக் கேட்டார் மும்தாஜ்.

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் நித்யா-மும்தாஜ் இடையே வெடித்த மோதல்!

திசை மாறி சென்ற இந்த வாக்குவாதத்தை தடுத்து நிறுத்திய கமல், அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கூறி அடுத்த நபருக்கு பேச வாய்ப்பளித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்துவிட்டு, நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் இப்படி பொது மேடையில் அடித்துக் கொள்வது பேசியது பார்வையாளர்களை சற்று முகம் சுழிக்கச்செய்தது.

 

Share this story