பிக் பாஸ் தமிழ்: அடுத்த சீசன் அறிவிப்பு!

பிக் பாஸ் தமிழ்: அடுத்த சீசன் அறிவிப்பு!

பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியை அடுத்து பிக் பாஸ் அடுத்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியை அடுத்து பிக் பாஸ் அடுத்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். முதல் சீசனுக்கு கிடைத்த அமோக ஆதரவால் 2ஆவது சீசனையும் கமலே தொகுத்து வழங்கி வந்தார். இதில் சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டனர்.

இதையடுத்து கடந்த 100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 2வின் டைட்டில் வின்னராக  ரித்விகா தேர்வு செய்யப்பட்டார்.  இரண்டாவது இடத்தை நடிகை ஐஸ்வர்யா பெற்றார்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கமல், மீண்டும் பிக் பாஸ் ரசிகர்களைச் சந்திப்பேன் என நம்புவதாகக் கூறினார். இதன் வாயிலாக விஸ்வரூபம் 3, இந்தியன் 3யில் வருகிறாரோ இல்லையோ பிக் பாஸ் 3யில் கண்டிப்பாக கமல் வருவார். பிக் பாஸ் மேடையை   தன் அரசியல் உத்தியாகப் பயன்படுத்தி வந்த கமல் ஹாசன் மீண்டும் இந்த மேடையின் மூலமாகவே ரசிகர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Share this story