பிரபாஸுடன் இணையும் லோகேஷ் கனகராஜ் ?… விரைவில் வெளியாகும் அறிவிப்பு…

பிரபாஸுடன் இணையும் லோகேஷ் கனகராஜ் ?… விரைவில் வெளியாகும் அறிவிப்பு…

நடிகர் பிரபாஸ் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பாகுபலி’ படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸின் நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது. தெலுங்கில் படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபாஸ், பான் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியாவில் புகழ்பெற்ற ஹீரோவாக வலம் பிரபாஸின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது ‘கேஜிஎப்’ படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். பிரபல கன்னட நடிகர் மது குருசாமி வில்லனாக கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி மிரட்டியுள்ள நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி இப்படம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உருவாகி வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், பிரபாஸ் படத்தை இயக்கவுள்ளதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி இயக்குனராக உள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தை முடிந்து, பிரபாஸுடன் லோகேஷ் இணைவது உறுதியானால் அடுத்த ஆண்டு இந்த படம் துவங்கும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.

Share this story