பிரம்மிக்க வைக்கும் பிரியங்காவின் வெட்டிங் கவுன்…!

பிரம்மிக்க வைக்கும் பிரியங்காவின் வெட்டிங் கவுன்…!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமணம் கடந்த ஆண்டு நடந்த நட்சத்திர திருமண நிகழ்ச்சிகளில் அதிக கவனம் ஈர்த்தது.

 
 
 

 
 
 
 
 

 
 

 
 
 

Unseens ?✨ #priyankachopra #ralphlauren

A post shared by Priyanka Chopra-Pedia ? (@priyankapedia) on

இதில் கிறிஸ்தவ முறைப்படியான திருமணத்திற்கு பிரியங்கா அணிந்திருந்த ஒயிட் கவுன் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. சுமார் 75 அடி நீளம் கொண்ட முகத்திரையுடன் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கவுனை பிரபல அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் ரால்ஃப் லாரன் வடிவமைத்திருந்தார்.

பிரியங்காவிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கிறிஸ்தவ திருமண ஆடை எப்படி உருவானது என்பது குறித்த வீடியோவை ஆடை வடிவமைப்பாளர் ரால்ஃப் லாரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த ஆடையில் முத்துக்களும், ஸ்வரோவ்ஸ்கி கற்களும் பதிக்கப்பட்டு மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 15 கைத்தேர்ந்த கலைஞர்கள் இணைந்து சுமார் 1,826 மணி நேரமாக நுணுக்கமான கைவினை பணியில் ஈடுப்பட்டு கவுனை வடிவமைத்ததாக கூறப்பட்டுள்ளது.

ஜோத்பூரில் நடைபெற்ற ராயல் திருமணத்தைத் தொடர்ந்து சுவிட்ஸர்லாந்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் தம்பதி முத்தமிட்டு புத்தாண்டை வரவேற்றனர். பிரியங்கா-நிக் ஜோடியின் ஹாலிடே புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 

 
 
 
 
 

 
 

 
 
 

From mine to yours.. Happy new year everyone! #2019

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

 

Share this story