பிரியங்கா சோப்ரா திருமணத்தில் 4 நாட்கள் ஹோட்டல் செலவு இத்தனை கோடியா?

பிரியங்கா சோப்ரா திருமணத்தில் 4 நாட்கள் ஹோட்டல் செலவு இத்தனை கோடியா?

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் சில முக்கிய பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரம் பிடித்தார். ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ஹோட்டல்  ‘உமைத் பவன்’ பேலஸில் இந்து முறைப்படியும், கத்தோலிக்க கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் சில முக்கிய பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

பிரியங்கா சோப்ரா திருமணத்தில் 4 நாட்கள் ஹோட்டல் செலவு இத்தனை கோடியா?

இந்த  ஒரே ஒரு திருமணத்தால்  ‘உமைத் பவன்’ பேலஸ் மூன்று மாதங்களுக்கு தேவையான வருமானத்தை ஹோட்டல் மூன்று பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய ஹோட்டல் கம்பெனிகளின்  தலைமை அதிகாரியான புனித் சட்வால் கூறும்போது,   கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ராவின் திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் மூன்று மாதங்களில் ஈட்ட வேண்டிய வருமானம் அந்த ஒரு மாதத்தில் கிடைத்தது என்றார். 

இதனிடையே பிரபல ஊடகங்கள் அளித்துள்ள தகவலின் படி,  பிரியங்கா சோப்ராவின் திருமணத்திற்காக ஹோட்டலுக்கு மட்டும் 4 லட்சத்து 61 ஆயிரம் டாலர்கள் செலவழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது இந்திய ரூபாய் மதிப்பில் 3,28,60,080 ரூபாய் ஆகும். 

Share this story