பிறந்த நாள் விழா கொண்ட்டாடுவாரா ராம் சரன்?!

பிறந்த நாள் விழா கொண்ட்டாடுவாரா ராம் சரன்?!

தந்தை சிரஞ்சீவியைத் தாண்டி வளர்ந்து இன்று தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்பவர் ராம் சரன் தேஜா. இப்போது ராஜமெளலியின் பெயரிடப்படாத பிரம்மாண்ட படத்தில் ஜூனியர்  என்.டி.ஆருடன் பரபரப்பாக  நடித்து வருகிறார்.  இந்த நிலையில் அவரது பிறந்தநாள் நெருங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 27 ம் தேதி ராம்சரன் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவது வழக்கம். அப்போது ரசிகர்கள் சார்பாக பிரமாண்ட கேக் வெட்டுவது, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று கோலாகலமாக அந்த நாள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு கூடுதலாக ஹைதராபாத்தில் ஷில்ப கலாவேதிக என்கிற பிரமாண்ட உள்ளரங்கில் சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அபாயத்தால் பொது விழாக்களை அரசு தடை செய்து வருகிறது. இதனால் தன் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் ஒரே இடத்தில் கூடுவது அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்ல தல்ல என்பதால் விரைவில் ராம்சரன் தேஜாவே இந்த ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ரத்துச் செய்து அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

Share this story