ப்ளட் ஷாட் விமர்சனம்.

ப்ளட் ஷாட் விமர்சனம்.

கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன் போன்ற காமிக்ஸ் கதைகளுக்கு ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பு இருக்கிறது. ஆனால் இந்த காமிக்ஸ் கதாநாயகர்கள் எல்லாம் டி.சி மற்றும் மார்வெல்லிடமே இருப்பதால் சோனி தனக்கென ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்கும் முயற்சியில் எடுக்கப்பட்ட படம்தான் ப்ளட் ஷாட். இது டேவிட் ஸ்டீவன்சன் படைத்த ரே காரிசனை நாயகனாகக் கொண்டது. வில்லனால் கொள்ளப்பட்ட ரே காரிசனின் உடலை எடுத்து வந்து அதில் இருந்த ரத்தம் முழுவதையும் வெளியேற்றிவிட்டு, பலகோடி எண்ணிக்கையில் மிக நுண்ணிய நானோ ரோபோக்களை அவனது ரத்த நாளங்களில் ஓட வைக்கிறான் விஞ்ஞானி கை பியர்ஸ்! ரே காரிசனுக்குத் துணையாக கே.டி என்கிற பெண்ணும் தயாரிக்கப்பட்டிருக்கிறாள்.

ப்ளட் ஷாட் விமர்சனம்.

அவளது நுரையீரலில் சில மாற்றங்கள் செய்ப்பட்டு இருக்கிறது. அவளால் நீருக்குள் சுவாசிக்க முடியும்.எல்லாம் தயாராகி வில்லன் விஞ்ஞானி தன் ஆசையை நிறைவேற்றும் முன் ரே தனது சொந்த வில்லனைத் தேடிப்போக அவனை பிடிக்க விஞ்ஞானி அலைவதே வெகு நேரத்தை சாப்பிட்டு விடுகிறது.வில்லன் விஞ்ஞானியாக வரும் கை பியர்சன் கேரக்ட்ட ர் மிகவும் குழப்பமானதாக இருப்பதும் வேகத்தைக் குறைத்து விடுகிறது. ஆனால்,வின் டீசல் வழக்கம் போல விதவிதமான ஆக்‌ஷன் காட்சிகளில் தோன்றி ரசிகர்களின் கவனம் ஈர்க்க முயல்கிறார் , அதுவும் வெற்றி பெறவில்லை.வின் டீசல் ஏற்கனவே இப்படி பல சாகசங்கள் செய்தவர் என்பதால் ரே காரிசனிடம் எதுவும் ரசிகர்களை ஈர்க்கவில்லை.சோனி இவனை விட்டுவிட்டு வேறு காமிக்ஸ் நாயகனை பிடிப்பதுதான் சந்தையை தக்க வைக்க ஒரே வழி.

Share this story