”மத்திய மாநில அரசுகள் தரக்கூடிய தேசவிரோதி என்கிற பட்டத்தையும் ஏற்கத் தயார்” – இயக்குநர் அமீர்

”மத்திய மாநில அரசுகள் தரக்கூடிய தேசவிரோதி என்கிற பட்டத்தையும் ஏற்கத் தயார்” – இயக்குநர் அமீர்

இன்று தமிழ்நடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது. காய்கறிகள் வாங்கவும், மருந்து வாங்கவும் இத்தனை நாட்களில் இவ்வளவு பெரிய க்யூ இருந்ததில்லை, வரிசையில் நின்று வாங்கும் அளவிற்கு பொறுமையும் இருந்ததில்லை.. ஆனால் மது வாங்க  பல இடங்களில் 5 கி.மீ தூரத்திற்கு, ஏன் அதற்கு  மேலும் மிகப்பெரிய க்யூவில், வெயிலையும் பாராமல் பொறுமையாக இன்று மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர் மதுப்பிரியர்கள்.

”மத்திய மாநில அரசுகள் தரக்கூடிய தேசவிரோதி என்கிற பட்டத்தையும் ஏற்கத் தயார்” – இயக்குநர் அமீர்

இதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநரும் நடிகருமான அமீர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்போ பீடா கடைய திறப்பதற்கும் சாராயக்கடையை திறப்பதற்கும் என்ன அவசியம் ஏற்பட்டது என தெரியவில்லை. மக்கள் உங்களிடம் கோரிக்கை வைத்தார்களா? யாரை திருப்திபடுத்துவதற்காக இதை செய்கிறீர்கள். யாரை ஏமாற்றுவதற்காக அல்லது யாரை மகிழ்விப்பதற்காக, என்ன வருமானத்தை ஈட்டுவதற்காக இதை எல்லாம் செய்கிறீர்கள் எனத் தெரியவில்லை.

”மத்திய மாநில அரசுகள் தரக்கூடிய தேசவிரோதி என்கிற பட்டத்தையும் ஏற்கத் தயார்” – இயக்குநர் அமீர்

உண்மையிலேயே அதிகாரிகளிடம் ஆலோசனை செய்துதான் இதை எல்லாம் செய்றிங்களான்னு ஆச்சரியமா இருக்கு. சந்தேகமாவும் இருக்கு.. எதிர்க்கட்சிகள் கூட்டம் போட சொன்னதற்கு அவர்கள் என்ன மருத்துவர்களா?அவர்களிடம் ஆலோசனை செய்வதற்கு என முதல்வர் கூறினார். அய்யா நான் உங்களிடம் கேட்கிறேன்.. இது எந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்தீர்கள், எந்த பொருளாதார நிபுணருடன் ஆலோசனை செய்து மதுக்கடையை திறக்கிறீர்கள்.

”மத்திய மாநில அரசுகள் தரக்கூடிய தேசவிரோதி என்கிற பட்டத்தையும் ஏற்கத் தயார்” – இயக்குநர் அமீர்

40 நாட்களாக எந்த வேலைக்கும் செல்லாமல், எந்த வருமானமும் இல்லாமல், எப்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் எப்போது தங்களது குடும்பத்தை மீண்டும் தூக்கி நிறுத்தலாம் என எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கக்கூடிய சூழலில், நீங்கள் எங்கள் வீட்டில் இருக்ககூடிய குழந்தையின் கொலுசு, தாய்மார்களின் தாலியைக் கூட விற்பதற்கு வழி செய்து விட்டீர்கள். இதே நிலை தொடர்ந்தால் குழந்தையின் கொலுசைக் கூட விட மாட்டார்கள் அதை கூட எடுத்து சென்று குடித்து விடுவார்கள் என கவலை பட தெரிவித்துள்ளார்.

”மத்திய மாநில அரசுகள் தரக்கூடிய தேசவிரோதி என்கிற பட்டத்தையும் ஏற்கத் தயார்” – இயக்குநர் அமீர்

Share this story