மன்னிப்பு கேட்க சொல்லும் தமிழக அரசு: சர்காருக்கு தொடர் ஆதரவு அளிக்கும் கமல் ஹாசன்; உண்மை நிலவரம் என்ன?

மன்னிப்பு கேட்க சொல்லும் தமிழக அரசு: சர்காருக்கு தொடர் ஆதரவு அளிக்கும் கமல் ஹாசன்; உண்மை நிலவரம் என்ன?

சர்கார் படத்தின் சர்ச்சை காட்சிகள் குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கைக்கு நடிகரும் அரசியல்வாதியுமான கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: சர்கார் படத்தின் சர்ச்சை காட்சிகள் குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கைக்கு நடிகரும் அரசியல்வாதியுமான கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்க்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்கக் கோரி தமிழகத்தில் பல திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது.

சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கமாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் வழக்கு விசாரணை இன்று வரவுள்ளது.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான  கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில்,  ‘சர்கார்’ திரைப்படம் மத்திய தணிக்கை வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்க அரசு முயற்சிப்பதாகவும், தோற்கடிக்கப்பட்ட பாஸிசம் மீண்டும் தலைதூக்குவதாகவும், இது ஜனநாயக முறையல்ல’ என்றும் கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

Share this story