‘மாஸ்டர்’ இந்தி ரீமேக்கில் சல்மான் கான் ?… விரைவில் உருவாகிறது…

‘மாஸ்டர்’ இந்தி ரீமேக்கில் சல்மான் கான் ?… விரைவில் உருவாகிறது…

மாஸ்டர் இந்தி ரீமேக்கில் நடிகர்‌ சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட்டடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இவர்களுடன் சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

‘மாஸ்டர்’ இந்தி ரீமேக்கில் சல்மான் கான் ?… விரைவில் உருவாகிறது…

அனிரூத் இசையில் உருவாகிய ‌இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தன. இதில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. யூடியூப்பில் வெளியான இப்பாடல் இதுவரை 100 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. திரையரங்கில் வெளியாகி வெற்றிப்பெற்ற இப்படம் இரண்டு வாரம் கழித்து ஒடிடியிலும் ரிலீசானது.

‘மாஸ்டர்’ இந்தி ரீமேக்கில் சல்மான் கான் ?… விரைவில் உருவாகிறது…

தமிழில் மாபெரும் வெற்றிப்பெற்ற இப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. இப்படத்தை தயாரிக்க முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வந்ததது. இதையடுத்து ஏற்கனவே இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ள எண்டெமால் ஷைன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை விஜய் கதாபாத்திரத்தில் ‌நடிக்க வைக்க இந்நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதற்காக சல்மான்‌கனை இருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை ‌நடத்தியுள்ளது. இந்த படத்தின் கதையை விரிவாக கேட்டுக்கொண்ட அவர்,நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகவே மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிப்பது உறுதி என‌ கூறப்படுகிறது.

Share this story