மாஸ்டர் டிக்கெட் விற்பனை தூள்… 5 நாட்களுக்கு டிக்கெட் இல்லையாம்…

மாஸ்டர் டிக்கெட் விற்பனை தூள்… 5 நாட்களுக்கு டிக்கெட் இல்லையாம்…

மாஸ்டர் படத்தின் டிக்கெட் விற்பனை 5 நாட்களுக்கு திரையரங்களில் ஹவுஸ் புல் என தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் நடித்து வரும் 13ம் தேதி பொங்கலையொட்டி வெளியாகவிருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், நாயகியாக மாளவிகா மோகன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உள்ள இப்படத்தின் ஃப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

மாஸ்டர் டிக்கெட் விற்பனை தூள்… 5 நாட்களுக்கு டிக்கெட் இல்லையாம்…

இது ஒருபுறமிருக்க தியேட்டர் இருக்கை ஒதுக்கீட்டில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. முதலில் 50 சதவீதம் அனுமதி வழங்கிய தமிழக அரசு, பின்பு திரைத்துரையினர் விடுத்த கோரிக்கையடுத்து 100 சதவீதமாக மாற்றியது. அதன்பிறகு மத்திய அரசு மற்றும் நீதிமன்றத்தின் எதிர்ப்பையடுத்து, 100 சதவீத இருக்கை என்ற அறிவிப்பை திரும்பப்பெற்றது.

மாஸ்டர் டிக்கெட் விற்பனை தூள்… 5 நாட்களுக்கு டிக்கெட் இல்லையாம்…

இந்நிலையில் 50 சதவீதம் இருக்கையுடன்தான் தியேட்டர்கள் இயங்கும் என்று உறுதியாகிவிட்ட நிலையில், மாஸ்டர் படத்தின் விற்பனை சூடுப்பிடித்தது. டிக்கெட் விலை ரொம்ப அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்தில் முடிந்தது. விஜய் ரசிகர் மன்றத்திற்கு முன்னூரிமை என்ற அடிப்படையில் முதல் 5 நாட்களுக்கு கணிசமான டிக்கெட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் டிக்கெட் விற்பனை தூள்… 5 நாட்களுக்கு டிக்கெட் இல்லையாம்…

இதேபோன்று தமிழகம் தவிர கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் ஆன்லைன் புக்கிங் அமோகமாக நடைபெற்று வருகிறது. மலேசியா மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ள நாடுகளில் மாஸ்டர் படத்தின் வெளியீடு அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story