முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் – கௌதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம்… ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் – கௌதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம்… ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.  இந்நிலையில்  ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா இணைந்து நடிக்கும் புதிய படத்தை , இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி  இயக்கி வருகிறார்.

இதில்  இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து அவர் இந்தப்படத்திலும் நடிக்க இருக்கிறார். ஜி.வி.பிரகாஷுடன், கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இவர்களுடன் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன் குணா மற்றும் தொழிலதிபர் சாம் பால்  ஆகியோரும்  நடிக்கிறார்கள்.

முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் – கௌதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம்… ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

முதலில் கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் இப்படத்தை தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலகியதை அடுத்து , தற்போது ‘டிஜி பிலிம் கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிய, படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் – கௌதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம்… ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன், திரில்லர் கலந்து திரைக்கதையாக உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். விரைவில் இந்தப்படத்தில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  அதிகாரப்பூர்வமாக வெளியிட  படக்குழுவினர்  திட்டமிட்டுள்ளனர். மேலும் இறுதி கட்ட படப்பிடிப்புக்கும் படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.

முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் – கௌதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம்… ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

Share this story