முனைவர் பட்டம் பெற்றார் நடிகர் சார்லி

முனைவர் பட்டம் பெற்றார் நடிகர் சார்லி

59 வயதான நடிகர் சார்லியின் இயற் பெயர் மனோகர். பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக திரைப்படத்திற்காக தனது பெயரை ‘சார்லி’ என மாற்றிக் கொண்டார்.

“தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை” என்கிற ஆய்விற்காக நகைச்சுவை நடிகர் சார்லி முனைவர் பட்டம் பெற்றார். 

59 வயதான நடிகர் சார்லியின் இயற் பெயர் மனோகர். பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக திரைப்படத்திற்காக தனது பெயரை ‘சார்லி’ என மாற்றிக் கொண்டார். இயக்குநர் சிகரம்’ கே. பாலச்சந்தர் இயக்கிய ‘பொய்க்கால் குதிரை’ திரைப்படம் மூலம் 1983-ம் ஆண்டு நகைச்சுவை நடிகராக அறிமுகமான சார்லி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சுமார் 800க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் கோவிப்பட்டியில் பிறந்த இவர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் “தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை” என்கிற ஆய்விற்காக முனைவர் பட்டம் பெற்றார். கடந்த 2013 ஆம் ஆண்டு ‘தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் எம்.பில் முடித்தார். 
 

Share this story