மூன்று அவித்த முட்டை விலை ரூ.1672: அதிர்ச்சி தந்த ஹோட்டல் நிர்வாகம்; மயங்கி விழுந்த இசையமைப்பாளர்!

மூன்று அவித்த முட்டை விலை ரூ.1672: அதிர்ச்சி தந்த ஹோட்டல் நிர்வாகம்; மயங்கி விழுந்த இசையமைப்பாளர்!

அந்த ஹோட்டல் நிர்வாகத்திற்குக் கலால் வரித்துறை 25,000 ரூபாய் அபராதம் விதித்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு,  பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் 2 வாழைப்பழம் வாங்கியதற்கு  சண்டிகரில் உள்ள ஒரு ஹோட்டலில் 442 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அந்த ஹோட்டல் நிர்வாகத்திற்குக் கலால் வரித்துறை 25,000 ரூபாய் அபராதம் விதித்தது.

மூன்று அவித்த முட்டை விலை ரூ.1672: அதிர்ச்சி தந்த ஹோட்டல் நிர்வாகம்; மயங்கி விழுந்த இசையமைப்பாளர்!

இதை தொடர்ந்து மும்பையில் உள்ள ஃபோர் சீசன்  என்ற ஹோட்டலில் கார்த்தி தார் என்பவர் சாப்பிட்ட அவித்த முட்டைகளுக்கு  ரூ.1700 ரூபாயும், 1 ஆம்லெட்டுக்கு ரூ.850 ரூபாயும் கட்டணம் விதிக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களையும் இன்னும் மக்கள் மறக்காத நிலையில் தற்போது இதே போல் மீண்டும் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. 

மூன்று அவித்த முட்டை விலை ரூ.1672: அதிர்ச்சி தந்த ஹோட்டல் நிர்வாகம்; மயங்கி விழுந்த இசையமைப்பாளர்!

பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும்  பாடகருமான ஷேகர் ராவ்ஜியானி,  அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலான ஹயாத் ரீஜென்ஸிக்கு சென்றுள்ளார். அங்கு  மூன்று அவித்த முட்டைகளை ஆர்டர் செய்த அவருக்கு பில்லை  பார்த்ததும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் ஜிஸ்டி மற்றும் சேவை வரியோடு சேர்த்து ரூ.1672  கட்டணம்  வசூலிக்கப்பட்டுள்ளது.

இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மூணு முட்டைகளுக்கு இவ்வளவு தொகையா? என்று குறிப்பிட்டு ஹோட்டல் பில்லையும் பதிவிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் ஒரு டஜன் முட்டை வாங்கினா கூட இவ்வளவு ஆகாதே என்று வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

 

Share this story