யுகாதி திருநாள்: வாழ்த்து தெரிவித்துள்ள டோலிவுட் பிரபலங்கள்

யுகாதி திருநாள்: வாழ்த்து தெரிவித்துள்ள டோலிவுட் பிரபலங்கள்

தமிழ் புத்தாண்டைப் போல தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு யுகாதி ஆகும். இதே நாளை மஹாராஷ்டிரா  மக்கள் குடி பத்வா என்றும், மணிப்பூர் மக்கள் சஜிபு செய்ராவோபா என்றும் கொண்டாடுகின்றனர்.  இந்நிலையில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு டோலிவு பிரபலங்கள், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ரகுல் பிரீத்சிங், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் தங்களது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

யுகாதி திருநாள்: வாழ்த்து தெரிவித்துள்ள டோலிவுட் பிரபலங்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்து வருகின்றனர். சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்களுக்கும் இதே நிலைமையே.. இருப்பினும் பிரபலங்கள் பண்டிகை கொண்டாடுவதையும், தங்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் செயல்களையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

யுகாதி பண்டிகை குறித்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் மகேஷ் பாபு, வைரஸ் பரவாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும்  விளக்கினார். தொடர்ந்து மாநில மற்றும் மத்திய அரசுகள் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.

 

 

. யுகாதி திருநாள்: வாழ்த்து தெரிவித்துள்ள டோலிவுட் பிரபலங்கள்

 

இன்று முதன்  முதலாக ட்விட்டரில் இணைந்த சிரஞ்சீவி, தனது முதல் ட்வீட்டாக யுகாதி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் “இது போன்ற ஒரு தளத்தின் மூலம் எனது அன்பான ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடிந்திருப்பதாக கூறினார். உலகளாவிய இந்த சுகாதார நெருக்கடியை விழிப்புணர்வு மற்றும் பொறுப்புடன் தோற்கடிப்போம் என்றும் சிரஞ்சீவி பதிவிட்டுள்ளார்.

யுகாதி திருநாள்: வாழ்த்து தெரிவித்துள்ள டோலிவுட் பிரபலங்கள்

 

யுகாதி திருநாள்: வாழ்த்து தெரிவித்துள்ள டோலிவுட் பிரபலங்கள்

 

 

யுகாதி திருநாள்: வாழ்த்து தெரிவித்துள்ள டோலிவுட் பிரபலங்கள்

 

இதேபோல் பல பிரபலங்கள் அவர்களது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

Share this story