யூடியூப் ட்ரெண்டிங்கில் அடிச்சி தூக்கிய தல அஜித்!

யூடியூப் ட்ரெண்டிங்கில் அடிச்சி தூக்கிய தல அஜித்!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘அடிச்சி தூக்கு’ பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘அடிச்சி தூக்கு’ பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிவா இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘அடிச்சி தூக்கு’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.

டி.இமான் இசையில் உருவான ‘அடிச்சி தூக்கு’ பாடல் வெளியான 12 மணி நேரத்தில் 37 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். சுமார் 4,55,000 லைக்ஸ்களை பெற்று ‘அடிச்சி தூக்கு’ பாடல் யூடியூபில் புதிய சாதனை படைத்து வருகிறது. இப்பாடல் வெளியானதில் இருந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்து வருகிறது.

தல அஜித்தின் அறிமுக பாடலான ’அடிச்சி தூக்கு’ பாடலில் வயதான கெட்டப்பில் கம்பீரமாக அஜித் தோன்றுகிறார். செம மாஸான குத்து பாடலாக அமைந்துள்ள ‘அடிச்சி தூக்கு’ பாடலை தல ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றதுடன் கொண்டாடி வருகின்றனர்.

முதன் முறையாக கிராமிய பின்னணியில் நடிக்கும் அஜித், மதுரையின் காவல் தெய்வமாக விளங்கும் தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் மதுரை வட்டார வழக்கில் பேசி நடித்துள்ளார். இதனால், அஜித் ரசிகர்களிடையே இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

Share this story