யோகா டீச்சராக மாறிய நடிகை ஷில்பா ஷெட்டி!

யோகா டீச்சராக மாறிய நடிகை ஷில்பா ஷெட்டி!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மிகுந்த யோகா ஆர்வலர். மக்களுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சி குறித்த டிப்ஸ் தொடர்ந்து வழங்கி வருகிறார் ஷில்பா. இதன் மூலம் தனது ரசிகர்களும் ஆரோக்கியமாக இருக்க ஊக்குவித்து வருகிறார். அவர் எப்போதும் யோகாவை வாழ்வின் ஒரு அங்கம் என்றே கருதி வருகிறார்.

[video:https://www.instagram.com/p/CA4sEamh0PV/?utm_source=ig_web_copy_link]

ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும். அதற்காக ஒரு சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷில்பா. அதில் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் யோகா பயிற்சி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

[video:https://www.instagram.com/p/CBlGJGKhc8w/?utm_source=ig_web_copy_link]

“யோகா என்பது வாழ்க்கையில் சுதந்திரத்தைக் கண்டறிந்து நம் உலகில் அமைதியைக் கொண்டுவருவதற்கான ஒரு வழியாகும். இந்த சர்வதேச யோகா தினத்தில், யோகா பயிற்சி செய்வதன் மூலம் ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ளலாம். மேலும், நமது சமூகங்களில் நேர்மறை எண்ணங்களையும் மகிழ்ச்சியையும் பரப்புவோம். வீட்டிலிருந்தே குடும்பத்துடன் யோகா செய்து நம் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

[video:https://www.instagram.com/p/B_R5p-ZB61Y/?utm_source=ig_web_copy_link]

 

Share this story