ரக்‌ஷிதாவுக்கு சோஷியல் மீடியாவில் குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

ரக்‌ஷிதாவுக்கு சோஷியல் மீடியாவில் குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

கன்னட சூப்பர்ஸ்டார் புனித்ராஜ்குமாரின் ஜோடியாக 2002ல் அப்பு படத்தில் அறிமுகமானவர் ரக்‌ஷிதா. அதே படத்தின் தெலுங்கு ரீமேகான இடியட்டிலும் அவர்தான் நாயகி. அப்புறம் அதைத் தமிழில் ‘ தம்’ என்கிற பெயரில் ஏ.வெங்கடேஷ் எடுத்தார். அதிலும் சிலம்பரசனுடன் ஜோடி போட்டார் ரக்‌ஷிதா.அதற்குப் பிறகு,கன்னடத்தில் விஷ்ணு வர்தன் முதல் சுதீப் ,தர்ஷன் வரை,தெலுங்கில் சிரஞ்சீவி தொடங்கி மகேஷ்பாபு வரை கதாநாயகியாக நடித்து ஒரு பெரிய ரவுண்ட் வந்தார்.

ரக்‌ஷிதாவுக்கு சோஷியல் மீடியாவில் குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

அதன் பிறகு கன்னட இயக்குநர் பிரேமைத் திருமணம் செய்து கொண்டு அரசியலில் இறங்கினார். காங்கிரஸ், தேவகவுடா கட்சி, என்று பல கிளைகள் தாவி இப்போது பிஜேபியில் இருக்கிறார். கதாநாயகியாக இருந்தவரை பாராட்டிய உலகம், அவர் அரசியலில் இறங்கி கட்சிதாவத் துவங்கியதும் அவரை கலாய்க்கத் தொடங்கி விட்டதால் கொஞ்சகாலமாக அமைதியாக இருந்தார்.

[video:https://www.instagram.com/p/B-XqX9WhB6u/?utm_source=ig_web_copy_link]

இந்த நிலையில் இன்று அவரது பிறந்தநாள் என்பதால் ராகினி துவிவேதி,ரஷிதா ராம்,தீபிகா தாஸ்,காவ்யா ஷெட்டி என்று கன்னட ஸ்டார்கள்  வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.சுதீப் ஒரு படி மேலே போய்,இந்த நகரம் ( பெங்களூரு) இவளவு அமைதியாக இருப்பதால் நீங்கள் உங்கள் இருப்பை இன்னும் வலிமையாக உணருவீர்கள் தோழி என்று பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

Share this story